உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாக்கெட் நாவல் : இளையராஜா இசை இல்லை…!!!

பாக்கெட் நாவல் : இளையராஜா இசை இல்லை…!!!

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'பாக்கெட் நாவல்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

இப்படம் அறிவிக்கப்பட்ட போது படத்திற்கு இளையராஜா இசையமைப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், நேற்று வெளியான படப்பிடிப்பு நிறைவு குறித்த அறிவிப்பு, அதற்கான வீடியோவில் கூட இளையராஜா பெயர் இடம் பெறவில்லை.

இளையராஜாவுக்கும், இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளையராஜா இப்படத்திலிருந்து விலகிவிட்டதாகச் சொல்கிறார்கள். அவருக்குப் பதிலாக இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் என்றும் கோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம். இளையராஜா, தியாகராஜன் குமாரராஜா கூட்டணி குறித்து அதிகம் எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தைத் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !