வாசகர்கள் கருத்துகள் (1)
விமர்சனம் என்ற பெயரில் பார்க்க விடாமல் செய்தார்கள்
கார்த்தி நடிப்பில், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் வெளியான 'சர்தார்-2' படம் தற்போது ஓடிடி தளத்தில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வருகிறது. இந்த ஸ்பை த்ரில்லர் படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரையரங்குகளில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், 'சர்தார் 2' படம் அமேசான் பிரைம் வீடியோ இந்தியாவின் ட்ரெண்டிங் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. டிஜிட்டல் தளத்தில் கிடைத்துள்ள இந்த திடீர் வரவேற்பு, இப்படத்தை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பதோடு, அதிகப்படியான பார்வையாளர்களைச் சென்றடைவதற்கும் ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு, ஓடிடியில் கிடைத்துள்ள இந்த அமோக வரவேற்பு படக்குழுவினருக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஸ்ட்ரீமிங் தளத்தில் இந்த படத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கை எந்த அளவிற்கு உயரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விமர்சனம் என்ற பெயரில் பார்க்க விடாமல் செய்தார்கள்