உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அக்டோபர் 9ல் 6 படங்கள் ரிலீஸ்

அக்டோபர் 9ல் 6 படங்கள் ரிலீஸ்


2026ம் ஆண்டில் கடைசி மூன்று மாதங்களில் நிறைய புதிய படங்கள் வெளியாகலாம் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தோம். கடந்த வாரம் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியான படங்களுடன் சேர்த்து இந்த ஆண்டில் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 170ஐக் கடந்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதே கால கட்டத்தில் 200 படங்கள் வெளியாகி இருந்தது.

அடுத்த வாரம் அக்டோபர் 15ம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2' படம் வெளியாக உள்ளது. இது போன்று முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது தியேட்டர்கள் கிடைப்பது சிரமம் என்பதால் அதற்கு ஒரு வாரம் முன்னதாகவும், பின்பும் புதிய படங்கள் வெளியாகாது.

ஆனால், இந்த வார வெள்ளிக்கிழமையான அக்டோபர் 9ம் தேதி, “ஆல் பாஸ், இ 1, கிட்டி, பருந்து, நோவா, தாய் நிலம்” ஆகிய 6 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் படங்களுமே சிறிய படங்கள்தான்.

ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2' படம் வந்தாலும் பரவாயில்லை என அக்டோபர் 16ம் தேதி விஜய் ஆண்டனி நடித்துள்ள 'அப்பா குட்டி' படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்த வாரம் அக்டோபர் 23ம் தேதி “ஹைக்கூ, இரண்டு வானம்” ஆகிய படங்கள் வெளியாவதாகவும் அறிவித்துள்ளனர். அதற்கடுத்து நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் வெளியாக உள்ள சில படங்களின் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. வரும் நாட்களில் மேலும் பல புதிய படங்களின் அறிவிப்புகள் வெளியாகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !