தமன்னாவுக்கு ஏமாற்றத்தை கொடுத்த ‛தி வான்'
ADDED : 1 days ago
ஹிந்தியில் சித்தார்த் மல்ஹோத்ரா, தமன்னா நடித்துள்ள தி வான் : போர்ஸ் ஆப் தி பாரஸ்ட் என்ற படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதன் ஆரம்பகட்ட விமர்சனங்கள் பெருமளவில் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
இப்படம் புராணங்கள், மாயாஜாலக் கூறுகள், நாட்டுப்புறக் கதைகள், காதல் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றை ஒன்றிணைக்க முயற்சித்துள்ளது. ஆனால், இந்த கலவை சரியாக அமையவில்லை என்பதே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
தமன்னாவின் நடிப்பும் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. ஹிந்தி சினிமாவில் ஒரு வலுவான மறுபிரவேசத்தை தரவும், தனது திறமையை நிரூபிக்கவும் அவருக்கு இதில் போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.