கமல் சொன்ன வார்த்தை... : சூரி நெகிழ்ச்சி
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, மகிமா நம்பியார், சுகாஸ், சத்யராஜ், பாலசரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‛மண்டாடி'. ராமநாபுரம் மாவட்டம் பின்னணியில் மீனவர்கள் இடையே நடக்கும் பாய்மர படகு போட்டியை மையமாக வைத்து இப்படம் வெளியாகி இருந்தது. ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்று ரூ.100 கோடி வசூலையும் தாண்டி, சூரிக்கு முதல் 100 கோடி படம் என்ற பெருமையையும் பெற்றுத் தந்தது.
இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருந்தார். இப்போது கமலும் பாராட்டி உள்ளார். சூரி, மதிமாறன், சுகாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். அப்போது படம் பற்றி கமல் கூறியதாக நடிகர் சூரி வெளியிட்ட பதிவில், ‛‛கமல் சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் சினிமா பயணத்திற்கு கிடைத்த மிகப்பெரிய நம்பிக்கையும், புதிய வெளிச்சமும். மண்டாடி குறித்து அவர் பகிர்ந்த பார்வை, வாழ்நாள் முழுவதும் என்னை வழிநடத்தும் ஆசீர்வாதம்'' என குறிப்பிட்டுள்ளார்.