உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: எம்ஜிஆர் பாணியில் நடித்த ஜெமினி

பிளாஷ்பேக்: எம்ஜிஆர் பாணியில் நடித்த ஜெமினி


அந்தக் காலத்தைய எல்லா ஹீரோக்களுக்குமே எம்ஜிஆர் பாணியில் ஒரு படம் நடித்து விட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அப்படி ஜெமினி கணேசன் தன் ஆசையை தீர்த்துக் கொண்ட படம் 'ஏழை பங்காளன்'. இந்த தலைப்புகூட எம்ஜிஆருக்காக பதிவு செய்து வைக்கப்பட்டிருந்ததுதான். வயலின் கலைஞர் மகாதேவன் தயாரித்ததால் எம்ஜிஆர் தலைப்பை விட்டுக்கொடுத்ததாக சொல்வார்கள். கே.சங்கர் படத்தை இயக்கினார்.

ஜெமினியுடன் ராகினி, புஷ்பலதா, எம்.என்.நம்பியா, எஸ்.ஏ. அசோகன், கே.பாலாஜி, டி.எஸ்.முத்தையா, கே.டி.சந்தானம், நாகேஷ், மனோரமா ஆகியோர் நடித்தனர்.

ஒரு பணக்கார வாலிபன், 'அண்ணல் காந்தியடிகள் தனது பிரசங்கங்களிலும், கட்டுரைகளிலும் உலக மக்களுக்குப் போதித்த உண்மைகளை ஊருக்கு ஒருவராவது பின்பற்றி நடக்க ஆரம்பித்தால், இல்லாதவர்களுக்கும் இருப்பவர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளி குறைந்து, நாளடைவில் வறுமை ஒழிந்து, வளமான வாழ்வை எல்லோரும் அடைய முடியும்' என நம்புகிறான்.

இதனால் தன்னிடமுள்ள செல்வத்தின் பெரும்பகுதியை ஏழைகளை முன்னேற்றப் பயன்படுத்துகிறான். இதனால் அவன் ஏழை பங்காளன் என ஊரார் புகழ்ந்துரைக்கிறார்கள். ஊருக்கு நல்லது செய்யும் அந்த இளைஞன் சந்திக்கும் பிரச்னைகள்தான் படத்தின் கதை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !