உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் 2 : வில்லி காந்தாவாக வித்யாபாலன்

ஜெயிலர் 2 : வில்லி காந்தாவாக வித்யாபாலன்

ரஜினி நடித்த 'ஜெயிலர்' படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா 'போதி' என்ற கதாபாத்திரத்திலும், சுராஜ் வெஞ்சரமூடு 'திலீப்' என்ற கதாபாத்திரத்திலும் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது வித்யா பாலனின் 'காந்தா' தோற்றம் வெளியாகியுள்ளது.

அறிமுக வீடியோவில் நீல நிற சேலை அணிந்து, கையில் சிகரெட்டுடன் படிக்கட்டுகளில் வித்யா பாலன் இறங்கி வருகிறார். இங்கே வந்த பிறகு எங்கள் பேச்சைக் கேட்காமல் யாரும் வெளியேற முடியாது என்று பஞ்ச் டயலாக் பேசுகிறார். ரஜினிக்கு எதிரான பவர்புல் கதாபாத்திரமாக காந்தா இருக்கும் என்று தெரிகிறது.

மேலும் இந்த படத்தில் மிதுன் சக்ரவர்த்தி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். முதல் பாகத்தை இயக்கிய நெல்சன் இயக்குகிறார். வரும் அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !