ராம் பொதினேனி படத்தில் சம்யுக்தா
ADDED : 26 minutes ago
தெலுங்கு நடிகரான ராம் பொதினேனி தமிழில் ‛தி வாரியர்' படத்தில் நடித்தார். இப்போது இவர் இயக்குனராக களமிறங்குகிறார். தனது முதல் இயக்கத்தில் அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிப்பதாக அறிவித்துள்ளனர். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் வாத்தி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார்.
சம்யுக்தாவிற்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். சைக்கலாஜிக்கல் திரில்லராக ஆக் ஷன் கதைக்களத்தில் படம் உருவாகிறது. சாம் சிஎஸ் இசையமைக்கிறார். தமிழிலும் வெளியிடும் விதமாக இப்படம் உருவாகிறது.