உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்ரீ ஸ்ரீ ரிலீஸ் எப்போது

ஸ்ரீ ஸ்ரீ ரிலீஸ் எப்போது

துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‛ஐ ஆம் கேம்'. சூதாட்ட பின்னணியில் ஆக் ஷன் படமாக வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து தெலுங்கில் ரவி நெலகுடிதி இயக்கத்தில் ஸ்ரீ ஸ்ரீ என்ற படத்தில் நடித்துள்ளார். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

காதல் கதையில் உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. மற்ற பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திலிருந்து வெளியான பொம்மா பொம்மா பாடல் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தை டிசம்பர் 4ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், மலையாளம் உள்ளிட்ட பிறமொழிகளிலும் வெளியிட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !