உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, 9 வயதில் தான் நடனமாடிய வீடியோவை பகிர்ந்த ஸ்ரீலீலா!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, 9 வயதில் தான் நடனமாடிய வீடியோவை பகிர்ந்த ஸ்ரீலீலா!


நடிகை ஸ்ரீலீலா தனது சிறுவயது வீடியோ ஒன்றைப் பகிர்ந்து கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 9 வயதில் தான் நடனமாடும் வீடியோவைப் பகிர்ந்த அவர், தனது சிறுபிராயத்தையும் செவ்வியல் நடனத்துடனான தனது ஆரம்பகால தொடர்பையும் ரசிகர்கள் காணும் வாய்ப்பை அளித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்த ஸ்ரீலீலா, கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள். 9 வயது லீலாவிடமிருந்து எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில், சிறுமி ஸ்ரீலீலா பாரம்பரிய உடையில் செவ்வியல் நடனமாடுவதைக் காண முடிகிறது. குடும்ப வாட்ஸ்அப் குழுவில் தனது அம்மா பகிர்ந்ததை பார்த்த பிறகு, இதை உங்களுடன் பகிர்ந்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தில் நடித்த ஸ்ரீ லீலா, தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'ஓம்' படத்தில் சாய் பல்லவியுடன் சேர்ந்து இன்னொரு நாயகியாக நடித்து வருகிறார். இதுதவிர, ஹிந்தியில் அனுராக் பாசு படத்திலும் நடிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !