ஹாய் படத்தை பார்க்கல, பாக்யராஜை மிஸ் பண்ணுறேன் : ராதிகா
கடந்தவாரம் கவின், நயன்தாரா, பிரபு, ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‛ஹாய்'. கலவையான விமர்சனங்கள் வருகின்றன. ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளன. சென்னையில் நடந்த ஹாய் பட நன்றி அறிவிப்பு விழாவில் நடிகை ராதிகா பேசியது...
நான் ஹாய் படத்தை இன்னும் பார்க்கவில்லை. இன்னும் பார்க்கிற தைரியம் வரல. அந்த படத்தை பார்த்துவிட்டு பூர்ணிமா அழுதார், பாக்யராஜ் உடன் நான் இணைந்து நடித்த கடைசி படம் அது. அந்த நாட்களை மறக்கவே முடியாது. அவர் என்னை புள்ள என செல்லமாக அழைப்பார். நான் அவரை ராஜா என்பேன். இந்த படப்பிடிப்புதளத்தில் அவ்வளவு சந்தோசமாக இருந்தோம். இதில் நடித்த பிரபுசார் வீட்டில் இருந்து சாப்பாடு வரும். படப்பிடிப்பில் இயக்குனராக அவ்வப்போது கருத்து சொல்வார் பாக்யராஜ். ராஜா, நீங்க நடிக்க வந்து இருக்கீங்க. அமைதியாக இருங்க என்பேன். நயன்தாராவுக்கு இது வெற்றி படம். அவர் அதிகம் பேசமாட்டார். அவர் ரப்பான ஆள். அவர் உடல் அளவிலும் மன தளவிலும் வலிமையான பெண். விக்னேஷ் சிவன், நயன்தாரா பவர் கப்பிள் என்றார்.
நடிகர் பிரபு பேசுகையில், ‛‛இந்த படத்தில் சண்டை போட்டு நடிக்க வைத்தார் நயன்தாரா. எனக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. பாக்யராஜை மிஸ் பண்ணுறேன். அவர் சிறந்த எழுத்தாளர்'' என்றார்.