'சித்தா' இயக்குனருடன் கைகோர்த்த கமல்ஹாசன்; இந்த படமாவது துவங்குமா என எதிர்பார்ப்பு
நடிகர் கமல்ஹாசன் கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் 'தக்லைப்' படத்தில் நடித்திருந்தார். கமலின் 234வது படமான இது, தோல்வியடைந்தது. அதன்பின், எச்.வினோத், அன்பறிவு, நெல்சன் திலீப்குமார் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அடுத்தடுத்து அறிவிப்பு வெளியானது. ஆனால், இதுவரை எந்த படமும் துவங்கப்படவில்லை. அறிவிப்பு மட்டும் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது 239வது படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.
'பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா, வீர தீர சூரன்' படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ள படத்தின் டெஸ்ட்ஷூட் போட்டோவை பகிர்ந்த கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் 'தோ வாரேன்' எனப் பதிவிட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், இந்த படமாவது துவங்கப்படுமா, வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.