அடுத்தடுத்து புறக்கணிப்பு: கயாடு லோகருக்கு என்னாச்சு?
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'இம்மார்டல்' படத்தில் நடித்திருக்கிறார் கயாடு லோகர். செப்டம்பர் 4ல் படம் ரிலீஸ். சென்னையில் நடந்த இந்த பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் துல்கர் சல்மான் ஜோடியாக 'ஐ ஆம் கேம்' படத்திலும் நடித்துள்ளார். நாளை (செப்.,3) இந்த படம் ரிலீஸ். சென்னையில் இந்த பட நிகழ்ச்சியிலும் கயாடு கலந்து கொள்ளவில்லை. அந்த படத்தில் நடித்த இன்னொரு ஹீரோயின் சம்யுக்தா கலந்து கொண்டார்.
'இம்மார்டல், ஐ ஆம் கேம்' குழுவினர் கயாடுவை புகழ்ந்து பேசினர். கயாடு ஏன் கலந்து கொள்ளவில்லை என விசாரித்தால் அவர் சூர்யா படத்தில் நடிக்கிறார். வேறு சில படத்தில் பிஸி என தகவல் வருகிறது. சில மணி நேரம் நடக்கும் விளம்பர நிகழ்ச்சிகளில் கயாடு கலந்து கொள்ளாமல் இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஒரு காலத்தில் இப்படி இருந்த நயன்தாரா 'டாக்ஸிக், ஹாய்' பட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேட்டி கொடுப்பது குறிப்பிடத்தக்கது.