உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லண்டனுக்கு திரிஷா சென்றது ஏன்

லண்டனுக்கு திரிஷா சென்றது ஏன்

சில நாட்களாக லண்டனில் இருக்கிறார் திரிஷா. ஏன் என்பதற்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. பிரபல இயக்குனர் ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் புதிய படத்தில் இவர் நடிக்கிறார். இவருடன் ராதிகா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் உளவியல் சார்ந்த திகில் கதையில் உருவாகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது.

படம் குறித்து இயக்குனர் ராஜா கிருஷ்ண மேனன் கூறுகையில், “இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படம், முதல் உளவியல் திகில் படம். முழுக்க முழுக்க பெண்களை மையமாகக் கொண்ட எனது முதல் கதை. அதோடு, த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா , அபர்ணா பாலமுரளி போன்ற அற்புதமான நடிகர்கள் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது என்னை மேலும் உற்சாகமாகியுள்ளது'' என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !