மண்டாடி என் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமையும் : சுஹாஸ்
சூரி நாயகனாக நடித்துள்ள படம் மண்டாடி. கடல் சார்ந்த சாகசத் படமான இதை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரில் இடம்பெற்ற பிரமாண்டமான காட்சிகள், அதிரடி சண்டைக்காட்சிகள் மற்றும் கரடுமுரடான களப்பின்னணியால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தின் மூலம் தெலுங்கில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள சுஹாஸ் தமிழ் சினிமாவில் கால் பதிக்கிறார். அவர் கூறுகையில், ‛‛இந்த மண்டாடி படத்தில் புலி என்ற வில்லன் வேடத்தில் நடிக்கிறேன். சூரிக்கு எதிராக மோதும் ஒரு சக்திவாய்ந்த வில்லன் வேடம். எங்களுக்கிடையிலான மோதல், போட்டி சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் என்று கூறும் சுஹாஸ், இந்த படம் எனது திரையுலக பயணத்தில் பெரிய திருப்புமுனையாக அமையும் என்கிறார். மண்டாடி படத்தில் மஹிமா நம்பியார் நாயகியாக நடித்துள்ளார்.