உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மன உளைச்சல், அறுவை சிகிச்சை.. இனி நம்ப மாட்டேன்: காதல் வேதனை குறித்து அனுபமா

மன உளைச்சல், அறுவை சிகிச்சை.. இனி நம்ப மாட்டேன்: காதல் வேதனை குறித்து அனுபமா


நடிகை அனுபமா பரமேஸ்வரன், நடிகர் துருவ் விக்ரம் இருவரும் காதலித்ததாகவும், தற்போது பிரிந்துவிட்டதாகவும் சமீபகாலமாக தொடர் செய்தியாக வருகிறது. ஆனால், இருவருமே இதுவரையில் தாங்கள் இருவரும் காதலித்தோம், பிரிந்தோம் என்று பெயரை குறிப்பிட்டு ஓபனாக சொல்லவில்லை.

இதனிடையே, ஒரு வீடியோ பேட்டியில் தனது காதல் பற்றியும், காதலன் பற்றியும் அவரது பெயரை குறிப்பிடாமல் அனுபமா மனம் திறந்து பேசியிருந்தார். அதில் காதலரைப் பற்றி பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். இந்த நிலையில், தற்போது அவரால் தான் அடைந்த மன உளைச்சல் பற்றி பேசியுள்ளார்.

அனுபமா பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளாகவே வெளியே நன்றாக இருப்பது போல் நடித்துக்கொண்டிருந்தேன். மன அழுத்தம், பதற்றம், பானிக் அட்டாக், கை கால் நடுக்கம், தொடர் தலைவலி, எடை குறைவு போன்ற தீவிர உடல்நலப் பிரச்னைகளை சந்தித்தேன். என் காதலர், பிரிந்துவிடலாம் எனக் கூறிவிட்டு, இரண்டே நாளில் நீ இல்லாமல் வாழ முடியாது என்றெல்லாம் பேசினார். இது ஏதோ உளவியல் ரீதியான பிரச்னை என நினைத்து இருவரும் சேர்ந்து couple therapy சென்றோம்.

அவரது காதல் உண்மையா, வெறுப்பு உண்மையா, மன்னிப்பு உண்மையா என என்னால் சொல்ல முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலால் கண்ணில் பிரச்னை ஏற்பட்டு அறுவை சிகிச்சையும் செய்தேன். கஷ்டமான நேரத்தில் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்ப்பேன். அப்போது கூட அவர் எனக்கு ஆறுதலாக இல்லை. நம் துணையிடம் நாம் பொறுப்புணர்ச்சியை தான் எதிர்பார்ப்போம். மன்னிப்பு கேட்பது வெறும் ஈகோவை விட்டுக்கொடுப்பதுதான். ஆனால், மாறுவதுற்கு உண்மையான முயற்சி தேவை.

முன்பு போல் இனி ஒருவரை கண்மூடித்தனமாக நம்ப மாட்டேன். இருந்தாலும், நான் ஆண்களுக்கு எதிரானவள் அல்ல. நடந்த சம்பவங்களில் இருந்து மீண்டு வந்துள்ளேன். இனி என் வாழ்க்கையை மீண்டும் புதிதாக கட்டமைக்க உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !