உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் ‛ஒரு கைதியின் டைரி' : போஸ்டரை வெளியிட்ட ரஜினி

மீண்டும் ‛ஒரு கைதியின் டைரி' : போஸ்டரை வெளியிட்ட ரஜினி

பழைய படங்களின் தலைப்பில் மீண்டும் படங்கள் அதிகளவில் உருவாகி வருகின்றன. இதற்கு காரணம் தலைப்பு பஞ்சமா என தெரியவில்லை. 1985ல் பாரதிராஜா இயக்கத்தில் கமல் இரண்டு வேடங்களிலும் அவருடன் ராதா, ரேவதி, மலேசியா வாசுதேவன் மற்றும் ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ‛ஒரு கைதியின் டைரி'.

இப்போது இதே தலைப்பில் ஒரு படம் உருவாகிறது. இதை சுசீந்திரன் இயக்க முதன்மை வேடத்தில் சாந்தனு, சீமான் நடிக்கின்றனர். சாம் சிஎஸ் இசையமைக்க, கண்ணன் ரவி தயாரிக்கிறார். இந்த படத்தின் போஸ்டரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அப்பா - மகன் உறவை மையமாகக் கொண்ட கதையாக உருவாகிறது. குடும்ப உறவுகளின் உணர்வுகளுடன் ஆக் ஷன் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்களும் இணைந்த கதைக்களமாக இப்படம் அமையவுள்ளது. மதுரையின் வாழ்வியலும், அப்பா - மகன் உறவில் ஏற்படும் உணர்வுப்பூர்வமான மாற்றங்களும் கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன.

இது கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் 10வது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !