உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முழுக்க முழுக்க ஒரு ஜாலியான படத்தில் நடிக்க ஆசைப்படும் விஜய் சேதுபதி!

முழுக்க முழுக்க ஒரு ஜாலியான படத்தில் நடிக்க ஆசைப்படும் விஜய் சேதுபதி!


‛தலைவன் தலைவி, காந்தி டாக்ஸ்' படங்களுக்கு பிறகு விஜய்சேதுபதி நடிப்பில் ‛பத்தா , ட்ரெயின், ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு' ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரப்போகின்றன. தற்போது ‛அரசன், பாக்கெட் நாவல்' போன்ற படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது விஜய்சேதுபதி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், மகிழ்ச்சியான மற்றும் கலகலப்பான ஒரு படத்தில் நடிக்க நான் ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் நான் எதிர்பார்க்கும் அந்த திரைக்கதை இதுவரை அமையவில்லை என்று கூறியுள்ளார். அடுத்தபடியாக நடிப்பதற்கு பல்வேறு கதைகள், வித்தியாசமான கதாபாத்திரங்கள் விவாதிக்கப்பட்ட போதிலும் இதுவரை எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள விஜய்சேதுபதி, தற்போது ஆக்சன் கலந்த வலுவான கதைகளுடன் மட்டுமே இயக்குனர்கள் என்னை அணுகி வருகிறார்கள். அதனால் நான் எதிர்பார்க்கும் ஜாலியான கதை என்ற அந்த தேடலிலும் தொடர்ந்து நான் ஈடுபட்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார் விஜய்சேதுபதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !