உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛டாக்ஸிக்' படத்தில் நான் யாருக்கும் உதட்டு முத்தம் கொடுக்கவில்லை என்கிறார் யஷ்!

‛டாக்ஸிக்' படத்தில் நான் யாருக்கும் உதட்டு முத்தம் கொடுக்கவில்லை என்கிறார் யஷ்!


‛கே.ஜி.எப்' படங்களின் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகர் யஷ், கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‛டாக்ஸிக்' படம் மூலம் திரைக்கு வருகிறார். அவர் நடிகராக மட்டுமின்றி இணை எழுத்தாளர் மற்றும் இணை தயாரிப்பாளராக என செயல்பட்டுள்ள இந்த டாக்ஸிக் படம் இன்னும் 10 நாட்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நேரத்தில் இப்படத்தின் விளம்பரக் காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

இப்படத்தின் டீஸர், டிரைலர் மற்றும் பாடல்களில் கியாரா அத்வானி மற்றும் தாரா சுதாரியா ஆகிய நடிகைகளுடனான யஷின் நெருக்கமான காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், ருக்மிணி வசந்துடனான சில காட்சிகளும் டிரைலரில் காட்டப்பட்டிருந்தன.

குறிப்பாக, யஷ் மற்றும் கியாரா அத்வானி தோன்றும் தபாகி பாடல் கவர்ச்சியான காட்சிகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தாயான பிறகும் இதுபோன்ற காட்சிகளில் நடித்ததற்காகக் கியாரா அத்வானி சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டார்.

இந்நிலையில், படத்தின் மீதான விமர்சனங்கள் மற்றும் ஆபாசமான காட்சிகள் என்ற குற்றச்சாட்டுகளுக்கு யஷ் விளக்கமளித்துள்ளார். அதில், விளம்பரக் காட்சிகள் எதிலும் உதட்டு முத்தக் காட்சிகள் இடம்பெறவில்லை என்றும், அதனால் இதை ஆபாசம் என்று சொல்வது எல்லை மீறிய விமர்சனம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த டாக்ஸிக் படம் ஆகஸ்ட் 26ம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் யஷூடன் இணைந்து கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர். நயன்தாரா இதில் யஷின் சகோதரியாக நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !