உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பஹத் பாசில் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த ராஜமவுலி

பஹத் பாசில் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த ராஜமவுலி


'புஷ்பா' படத்தின் மூலம் தெலுங்கிலும் வரவேற்பைப் பெற்ற நடிகர் பஹத் பாசில், தற்போது 'டோண்ட் ட்ரபுள் தி ட்ரபுள்' (Don't Trouble The Trouble) என்கிற படத்தில் நடிக்கிறார். இயக்குனர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் சஷாங் எலேட்டி. இயக்கியுள்ளார். செப்டம்பர் மாதம் இப்படம் வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் ராஜமவுலி சென்று பார்வையிட்ட தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இப்படத்தில் பஹத் பாசில் ஒரு தெரு மந்திரவாதியாக நடிக்கிறார். அவருக்கு ஒரு மர்மமான சிறுமியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதை மையப்படுத்தி ஒரு பேண்டஸி நகைச்சுவை கலந்த சாகச திரைப்படமாக இது உருவாகியுள்ளது. குழந்தை நட்சத்திரம் சாரா பலேகர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்திலிருந்து 'கேக்கு வாக்கு' என்கிற முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !