உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டாக்சிக் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் : 3 மணி 14 நிமிடங்கள் நீளம்….

டாக்சிக் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் : 3 மணி 14 நிமிடங்கள் நீளம்….

2026ல் அடுத்து வெளியாக உள்ள பான் இந்தியா படங்களில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு படம் 'டாக்சிக்'. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் நேரடியாகத் தயாராகி மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் கன்னட மொழிக்கான சென்சார் சான்றிதழ் இன்று வழங்கப்பட்டுள்ளது. 3 மணி நேரம் 14 நிமிடங்கள் ஓடும் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இதனால், 18 வயதுக்குக் குறைவானவர்கள் படத்தைப் பார்க்க முடியாது.

கன்னட மொழிக்கான தணிக்கை சான்றிதழை படம் வெளியாக உள்ள 10 நாட்களுக்கு முன்பே பெற்றுவிட்டார்கள்.

இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்த, விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் சிக்கி ஆறு மாதங்களுக்குப் பிறகே வெளியானது இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று.

அந்த அனுபவத்தின் காரணமாக 'டாக்சிக்' படத்திற்கு சீக்கிரமே சான்றிதழைப் பெற்றுள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Balaji
2026-08-14 11:47:59

ஜனநாயகன் படம் தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் இருக்க அப்போதய மாநில அரசும், மத்திய அரசும் போட்டி போட்டுக்கொண்டு வேலை செய்தன என்பது அனைரும் அறிந்த விஷயம்