உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஸ்லம்டாக்' படத்தில் தாதாவாக நடிக்கும் விஜய்சேதுபதி

'ஸ்லம்டாக்' படத்தில் தாதாவாக நடிக்கும் விஜய்சேதுபதி


தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கும் படம் 'ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோட்'. இதில் ஸ்லம் டாக்காக அதாவது சேரிப் பகுதி தாதாவாக நடிக்கிறார் விஜய்சேதுபதி. அவரை வேட்டையாடும் இன்கம் டேக்ஸ் அதிகாரியாக நடிக்கிறார் தபு. கணக்கில் காட்டாத ஹவாலா பணம் கடத்தல்தான் கதை. அந்த கடத்தல் தலைவனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். அவரை வேட்டையாடும் அதிகாரி தபு.

'டார்க் கிரித்தி வேர்ல்ட்' எனப்படும் அண்டர்கிரவுண்ட் தாதா கதையாக இது உருவாகி வருகிறது. சாம் கே. நாயுடு ஒளிப்பதிவையும், ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைப்பையும் கவனிக்கிறார்கள். பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர், ஜே.பி.மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான நாராயண ராவ் கொண்ட்ரோல்லாவுடன் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் இந்தியா முழுவதும் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. சம்யுக்தா நாயகியாக நடிக்கிறார், துனியா விஜய், பிரம்ஹாஜி, விடிவி கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !