உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மத்திய அரசின் உயர் அதிகாரிகள் பட்டியலில் ரக்ஷிதா

மத்திய அரசின் உயர் அதிகாரிகள் பட்டியலில் ரக்ஷிதா


சின்னத்திரை நடிகை ரக்ஷிதா. தற்போது திரைப்படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். திருமணமாகி விவாகரத்து செய்த இவர் சமூக வலைதளங்களிலும் பிசியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ 'சிட்கோ' இணையதளத்தில் உயர்மட்ட அதிகாரி அக்ஷிதா சிங்கின் பெயருக்கு நேராக அவரது படத்திற்கு பதிலாக நடிகை ரக்ஷிதா மகாலட்சுமியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இது தற்போது அரசுத்துறை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வு அரசு துறையின் பலகீனத்தை ஒருபுறம் காட்டினாலும், ரக்ஷிதாவின் ரசிகர் ஒருவர், இது மிகப்பெரிய தவறு என்பதும், அரசு பதிவுகளை திருத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்பதையும் அறியாமல் இதனை செய்திருக்கிறார். இது தொடர்பாக டில்லி சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !