கதை நாயகன் ஆனார் முத்துக்குமார்
ADDED : 5 hours ago
கூத்து பட்டறையில் இருந்து வந்தவர் முத்துக்குமார். 'வேட்டை' படத்தில் வில்லனாக அறிமுகமான அவர் தொடர்ந்து பேட்ட, சார்பட்டா பரம்பரை, மகான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்த 'தாய்க்கிழவி' படத்தில் அவரது நடிப்பு பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில் அவர் கதையின் நாயகனாக புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். அவருடன் இன்னொரு நாயகனாக புகழ் நடிக்கிறார். யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தின் பணி பூஜையயுடன் தொடங்கியுள்ளது.
சென்ட்ராயன், ராமர், சரத், அஜய் ராஜ், பவேல் நவகீதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் மதன் துரை இயக்குனராக அறிமுகம் ஆகிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார். டார்க் காமெடி ஜானரில் படம் உருவாகிறது.