உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அன்பே டயானா : கதைத் திருட்டு குற்றச்சாட்டு

அன்பே டயானா : கதைத் திருட்டு குற்றச்சாட்டு

'ஜமா' படத்தை இயக்கிய பாரி இளவழகன் இயக்கம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தமிழ்ப் படம் 'அன்பே டயானா'. இப்படம் கரண் கார்க்கி என்பவர் எழுதிய 'சட்டக்காரி' படத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் வெளியிட்டுள்ள இந்த நாவலை எழுதிய கரண் அவரது பேஸ்புக் பதிவில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.

நாவலை தழுவி படம் எடுப்பது, அந்த எழுத்தாளனுக்குத் தெரியாமலே நாவலின் கதை கருவை திருடுவது சட்ட விரோதமானது. சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“சட்டக்காரி” நாவலில் ஆங்கிலோ இந்தியப் பெண் லிண்டா, வட சென்னை இளைஞன் மூசா ஆகிய இருவர்தான் கதையின் மையக் கதாபாத்திரங்கள். அந்தக் கருவைத் திருடித்தான் 'அன்பே டயானா' படம் உருவாக்கப்பட்டுள்ளது என கரண் கார்க்கியின் நண்பர்களும் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் இப்படியான கதைத் திருட்டுக்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சேரன் தலைமையிலான தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் திரையுலகில் எழுந்துள்ளது.

இரண்டும் ஒன்றல்ல

இதற்கிடையே, கரண் கார்க்கி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில்,


“அன்பே டயானா' படத்தின் இயக்குனரிடம் எனது “சட்டக்காரி' நாவல் படித்தீர்களா என்று கேட்டேன், அவர் இல்லை என்று சொன்னார். 'சட்டக்காரி' நாவலில் உள்ள விஷயங்கள் 'அன்பே டயானா' படத்தில் இல்லை. இரண்டும் வெவ்வேறு தான். 'சட்டக்காரி' கடந்த காலம், 'அன்பே டயானா' நிகழ் காலம்.

நண்பர் சாலமன் போட்ட பதிவின் காரணமாக இந்த விஷயம் பரபரப்பாகிவிட்டது. பெரம்பூர், ஆங்கிலோ இந்தியப் பெண், விளையாட்டு வீரர் என்பதால் அவர் இப்படி பதிவிட்டிருக்கிறார். ஒரு பதட்டத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதற்கு பலரும் கமெண்ட்டு செய்து ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

கதைத் திருட்டு குறித்து விழிப்புணர்வு சம்பந்தமாக இதை நான் பார்க்கிறேன்.

'சட்டக்காரி' கதை 'அன்பே டயானா' கிடையாது. இரண்டிற்கும் தொடர்பு இல்லை. எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி,” எனப் பேசியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !