உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல் ரூ.50 கோடி : விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி பதிவு

முதல் ரூ.50 கோடி : விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி பதிவு

செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடிப்பில் ஜூலை 3ல் வெளியான படம் 'கட்டா குஸ்தி 2'. ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற இப்படம் தற்போது 55 கோடி வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வருடத்தில் 50 கோடி வசூலைக் கடந்துள்ள 8வது படமாக 'கட்டா குஸ்தி 2' இடம் பிடித்துள்ளது. வசூல் ரீதியாகவும் லாபத்தைக் கொடுத்துள்ளது.

விஷ்ணு விஷால் வெளியிட்ட பதிவில், ‛‛50 கோடிக்கு மேல் வசூலித்த எனது முதல் படம். மறக்க முடியாத தருணம். இந்த படத்தை பார்த்து கொண்டாடிய அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பே எனது பலம். இன்னும் கடினமாக உழைத்து சிறந்த கதைகளை சொல்லி, என்னால் முடிந்தவரை உங்களை மகிழ்விப்பேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

3வது வாரத்திலும் இப்படம் வெற்றிகரமாக 400க்கும் அதிகமான தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !