உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாக்ஷி அகர்வாலின் பல ஆண்டு கனவு நிறைவேற்றம்

சாக்ஷி அகர்வாலின் பல ஆண்டு கனவு நிறைவேற்றம்

'காலா', 'விஸ்வாசம்', 'அரண்மனை 3' உள்ளிட்ட திரைப்படங்களிலும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலமும் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். சில சிறுபட்ஜெட் படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். தற்போது அவர் தொழிலதிபராக மாறி உள்ளார்.

இயற்கை உரங்களை கொண்டு வளர்க்கப்பட்ட தாவர வகைகளை கொண்டு ஒரு ஊட்டசத்து உணவை உருவாக்கி உள்ளார். பொதுவாக நடிகைகள் முன்னணி ஊட்டசத்த்து உணவு நிறுவனங்களின் விளம்பர தூதர்களாக இருப்பார்கள். ஆனால் சாக்ஷி அகர்வால் அவரே உருவாக்கிய ஊட்டச்சத்து உணவை அவரே தனியாக நிறுவனம் தொடங்கி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது : கடந்த 5 ஆண்டுகளாக ஆராய்ச்சி, தயாரிப்பு மேம்பாடு மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு இதனை உருவாக்கி உள்ளேன். உடல்தகுதியை பராமரிப்பதிலும், திரைப்படப் பணிகளை சமநிலைப்படுத்துவதிலும் ஏற்பட்ட எனது அனுபவங்களே, தரமான ஊட்டச்சத்து தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. ந்திய மக்களுக்கு தரமான மற்றும் சிறந்த ஊட்டச்சத்து தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது பல ஆண்டுகளாக உருவாக்கி வந்த கனவை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !