உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா படத்துடன் மோதும் ‛ஹாய்'

சூர்யா படத்துடன் மோதும் ‛ஹாய்'

‛மாஸ்க்' படத்திற்கு பின் கவின் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛ஹாய்'. விஷ்ணு எடவன் இயக்கி உள்ள இதில் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். வித்தியாசமான காதல் கதையில் உருவாகும் இந்த படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் லலித்தின் 7 ஸ்கிரீன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன.

இப்போது ஆக., 14ல் படம் ரிலீஸ் என அறிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். மழை பெய்து கொண்டிருக்க நயன்தாராவை அழைத்து செல்ல பைக்கில் கவின் வருகிறார். நயன்தாரா கையில் அரிவாள் உடன் நிற்கிறார். அதை பார்த்து அதிர்ச்சியாகிறார் கவின். பின் இருவரும் பைக்கில் புறப்பட்டு செல்வது போன்று வீடியோ வெளியிட்டுள்ளனர். இதன் பின்னணியில் ஒலிக்கும் இசை நன்றாக உள்ளது.

ஆக., 14 அன்று தான் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடித்துள்ள விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படமும் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !