உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஐஸ்வர்யா ராஜேஷிற்கு அதிர்ச்சி கொடுத்த ஓ சுகுமாரி

ஐஸ்வர்யா ராஜேஷிற்கு அதிர்ச்சி கொடுத்த ஓ சுகுமாரி

தெலுங்கு சினிமாவில் அனில் ரவிபுடி இயக்கத்தில் சங்கராந்திக்கு வஸ்துனாம் என்ற படத்தில் வெங்கடேஷ்க்கு ஜோடியாக அவரது மனைவியாக நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படம் உலகளவில் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. இந்த பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, டோலிவுட்டில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருவீர் ஜோடியாக ஓ சுகுமாரி என்ற ஒரே ஒரு தெலுங்கு படத்தில் மட்டுமே நடித்தார்.

கடந்த 17ம் தேதி வெளியான ஓ சுகுமாரி படம், பாக்ஸ் ஆபீஸில் தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டது. உலக அளவில் திரைக்கு வந்த 3 நாட்களில் 1.2 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இப்படி மிகக் குறைந்த வசூலுடன் தொடங்கி, விமர்சகர்களிடமிருந்தும் பெரிய அளவில் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இனிவரும் காலங்களில் வலுவான கதைகளைத் தேர்ந்தெடுத்து ஐஸ்வர்யா மீண்டும் எப்படி கம்பேக் கொடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !