உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அல்லு அர்ஜுன் குரலாக ஒலிப்பவரின் இயக்கத்தில் ஆறாவது முறையாக நடிக்கும் ஆசிப் அலி

அல்லு அர்ஜுன் குரலாக ஒலிப்பவரின் இயக்கத்தில் ஆறாவது முறையாக நடிக்கும் ஆசிப் அலி


மலையாளத்தில் கடந்த 2024ல் பிஜூமேனன், ஆசிப் அலி நடிப்பில் வெளியான 'தலைவன்' திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ஜிஸ் ஜாய் இயக்கியிருந்தார். தற்போது இவர் இயக்கும் அடுத்த படம் பூஜையுடன் துவங்கியுள்ளது. இப்படத்திற்கு 'கோட்டயம் பெல்ட்' என தலைப்பிட்டுள்ளனர். இதில் ஆசிப் அலி கதாநாயகனாக நடிக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஜிஸ் ஜாய் 2013ல் அறிமுக இயக்குனராக இயக்கிய 'பைசைக்கிள் தீவ்ஸ்' படத்திலிருந்து 'தலைவன்' படம் வரை ஆறு படங்களில் ஐந்தில் ஆசிப் அலி தான் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இது இவர்கள் கூட்டணியில் உருவாகும் ஆறாவது படமாகும். இயக்குனர் ஜிஸ் ஜாய் இயக்குனராக மட்டுமல்ல, மலையாளத்தில் டப் செய்து வெளியிடப்படும் அல்லு அர்ஜுனின் படங்களில் மலையாளத்தில் அவரது முதல் படமாக வெளியான 'ஆர்யா' முதல் கடைசியாக வெளியான 'புஷ்பா 2' வரை தொடர்ந்து அவருக்காக டப்பிங் குரல் கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !