தென்னிந்திய சினிமா நிறைய மாறிவிட்டது : காஜல் அகர்வால்
ராமாயணா, பால கிருஷ்ணா 111 வது படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். ஹிந்தியில் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள தி இந்தியா ஸ்டோரி என்ற படம் வருகிற ஜூலை 24ம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் திரைக்கு வருகிறது.
இப்படம், தேசபக்தி மற்றும் புலனாய்வு கலந்த ஒரு அழுத்தமான கதைக்களத்தைக் கொண்டது. இதில் காஜல் இதுவரை பார்த்திராத ஒரு பவர்புல் ஆக்ஷன், நவரச நடிப்பு கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கமர்ஷியல் பட நாயகியாக மட்டுமே வலம் வந்த காஜல், இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
காஜல் அகர்வால் அளித்துள்ள ஒரு பேட்டி வைரலாகி வருகிறது. அதில், தென்னிந்தியத் படங்களில் கதாநாயகிகளின் தொப்புளைக் காட்டுவதில் அதிக ஆர்வம் காட்டப்படுகிறது என்ற நீண்டகாலமாக இருக்கும் ஒரு கருத்து குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த காஜல், கடந்த காலத்தில் இதுபோன்ற போக்குகள் இருந்திருக்கலாம், ஆனால் பல ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் இதுபோன்ற விஷயங்கள் கணிசமாக மாறியுள்ளன என்று கூறியுள்ளார்.