போர்வீரர் லச்சித் போர்புகனின் வாழ்க்கை படத்தை இயக்கும் ஆதித்யா தர்
ஹிந்தியில் வெளியான துரந்தர் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கியவர் ஆதித்யா தர். ரன்வீர் சிங், சஞ்சய் தத், மாதவன், அர்ஜுன் ராம்பால் மற்றும் அக் ஷய் கண்ணா என இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இப்படம் அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் கதையில் உருவானது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையின் பின்னணியைக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையும், பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. இப்படத்தின் இரண்டு பாகங்களும் பாக்ஸ் ஆபீசில் 3000 கோடிக்கு மேல் வசூலித்தன.
இந்த நிலையில் அடுத்தப்படியாக, புகழ்பெற்ற அஹோம் வம்சத்து ராணுவ தளபதி லச்சித் போர்புகன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ஆதித்யா தர் இயக்கப் போவதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் மிகச்சிறந்த போர் வீரர்களில் ஒருவராக லச்சித் போர்புகன் போற்றப்படுகிறார். இவர் கடந்த 1671-ஆம் ஆண்டு நடைபெற்ற புகழ்பெற்ற சரைகாட் போரில் முகலாயப் படைகளுக்கு எதிராக அஹோம் படைகளை வழி நடத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.