உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நான் ஆணவத்துடன் பேசவில்லை : ஸ்ரீலீலா

நான் ஆணவத்துடன் பேசவில்லை : ஸ்ரீலீலா

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தில் அறிமுகமான ஸ்ரீலீலா தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‛ஓம்' படத்தில் நடித்து வருகிறார். தவிர, ஹிந்தியிலும் ஒரு படத்தில் நடிக்கிறார். சோசியல் மீடியாவில் எந்த ஒரு நடிகரோ, நடிகையோ எனக்கு ஈடாக நடனமாட முடியாது என்று அவர் சொன்னதாக ஒரு செய்தி வைரலானது. ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ளார் ஸ்ரீ லீலா.

அவர் கூறுகையில், ‛‛இது போன்ற தவறான பிரச்சாரத்தை நான் கண்டிக்கிறேன். நடிப்பு குறித்தோ, நடனம் குறித்தோ ஆணவமான கருத்துக்களை ஒருபோதும் நான் கூற மாட்டேன். இப்படிப்பட்ட சிந்தனைகளை ஊக்குவிக்கும் சூழலில் நான் வளர்க்கப்படவில்லை. என்னுடைய சக கலைஞர்கள் மற்றும் சக நடிகர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதனால் இப்படி நான் சொல்லாத விஷயங்களை பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என்று கண்டித்துள்ளார் ஸ்ரீ லீலா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !