உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தியேட்டர் நெரிசல் சம்பவம் : அல்லு அர்ஜூன் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

தியேட்டர் நெரிசல் சம்பவம் : அல்லு அர்ஜூன் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன். புஷ்பா படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். 2024ல் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா 2'. இந்த படத்தின் சிறப்பு காட்சி ஐதராபாத்தில் உள்ள பிரபலமான தியேட்டரில் வெளியிடப்பட்டது. இதற்கு அல்லு அர்ஜூனும் வருகை தந்ததால் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கில் ரேவதி, 39 என்ற பெண் உயிரிழந்தார். அவரது 8 வயது மகனும் நெரிசலில் சிக்கி ஆபத்தான நிலையில் பல மாதங்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

அந்தக் கூட்ட நெரிசல் வழக்கில் அல்லு அர்ஜுனும் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அல்லு அர்ஜூன் 11வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனிடையே, போலீஸ் விசாரணை அறிக்கைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

இது தொடர்பான வழக்கு நம்பள்ளி நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், நடிகர் அல்லு அர்ஜூன் விசாரணைக்காக வரும் ஜூன் 22ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !