முதல் காதலை சொன்னால் தமிழகம் அதிரும்: வனிதா விஜயகுமார்
நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் கடந்த 1995ல் வெளியான 'சந்திரலேகா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இதில் நாயகனாக விஜய் நடித்திருந்தார். அதன்பிறகு ஏராளமான படங்களில் நடித்த அவர் சமீபத்தில் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார்.
இவர் ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து பிரிந்துள்ளார். இந்த நிலையில் யுடியூப் சேனல் ஒன்றிற்கு வனிதா அளித்த பேட்டியில் தன் முதல் காதல் பற்றி பேசியுள்ளார். அவர் பேசியதாவது: என்னுடைய முதல் காதல் பற்றி பேச வேண்டும் என்றால், என்னால் இப்போது எதையும் வெளிப்படையாக பேச முடியாது. அப்படி நான் அந்த உண்மையை சொன்னால் ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ந்துவிடும். அதனால் அதை சொல்லாமல் நான் மவுனமாக இருப்பதே நல்லது. எனது முதல் காதலை சொல்லாமலே பல ஆண்டுகளை கடந்து வந்துட்டேன். என்னுடைய நினைவுகள் எப்போதும் எனக்குள் மட்டும் தான் இருக்கும். முதல் காதல் ரகசியம் எனக்கும் சம்பந்தப்பட்ட அந்த நபர் என 2 பேருக்குமே மிக நன்றாக தெரியும். இவ்வாறு பேசியுள்ளார்.
வனிதாவின் இந்த பேட்டியால், தமிழகமே அதிர்ந்துவிடும் அளவிலான அந்த முதல் காதலர் யார் என சமூக வலைதளங்களில் பல யூகங்கள் கிளம்பி வருகின்றன.