நடிகர் யோகிபாபு தேடும் 'கெணத்த காணோம்' முதல் 'திரிஷ்யம் -3' வரை: இந்த வாரம் வெளியீடு..!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 'திரிஷ்யம்-3' உள்ளிட்ட பல புதிய படங்கள் இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
திரிஷ்யம்-3
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடிப்பில் மூன்றாவது பாகமாக வெளியான படம் 'திரிஷ்யம்-3'. மே மாதம் வெளியாகி உலகளவில் ரூ.330 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் நேற்று (ஜூன் 18ம் தேதி) தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.
கெணத்த காணோம்
இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் நடிகர் யோகிபாபு, லவ்லின் சந்திரசேகர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ' கெணத்த காணோம்'. இந்த படம் கடந்த 16ம் தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
ரத்த சம்பந்தம் (Raktha Sambandham)
தெலுங்கில் உருவாகியுள்ள குடும்ப பின்னணி கொண்ட வெப் தொடர் 'Raktha Sambandham'. இந்த தொடர் ஜீ5 தளத்தில் நேற்று (18ம் தேதி) வெளியாகியுள்ளது.
தைரியே சாஹசே அம்ருதா (Dhairye Sahase Amrutha)
தெலுங்கு இயக்குநர் பரத் பாபினேனி இயக்கத்தில் நடிகர் தினேஷ் கௌஷிகா, வேணி ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த காமெடி திரைப்படம் ' தைரியே சாஹசே அம்ருதா (Dhairye Sahase Amrutha)'. இந்த படம் நேற்று (ஜூன் 18ம் தேதி) ஆஹா தளத்தில் வெளியாகியுள்ளது.
அதிரடி
மலையாள நடிகர் பசில் ஜோசப், டோவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் ' அதிரடி'. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இன்று (ஜூன் 19ம் தேதி) சோனி லைவ் தளத்தில் வெளியாகியுள்ளது.
சேவ் தி டைகர்ஸ் 3( Save the Tigers 3)
தெலுங்கு இயக்குநர் ஸ்ரீராம் எரகம் இயக்கத்தில் வெளிவந்துள்ள வெப் தொடர் 'சேவ் தி டைகர்ஸ் 3( Save the Tigers 3)'. இந்த தொடரில் பிரியதர்ஷி, அபினவ் கோமதம் மற்றும் சைதன்ய கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இன்று (ஜூன் 19ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
அஷான் (Aashan)
மலையாள இயக்குநர் ஜான்பால் ஜார்ஜ் இயக்கத்தில் இந்திரன்ஸ், ஷோபி திலகன், ஜோமன் ஜோதிர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் 'அஷான் (Aashan)'. இந்த படம் இன்று (ஜூன் 19ம் தேதி) சன் நெக்ஸ்ட்டில் வெளியாகவுள்ளது.
ரேஸர் (Razor)
தெலுங்கு இயக்குநர் ரவி பாபு இயக்கத்தில் வெளிவந்த த்ரில்லர் திரைப்படம் 'ரேஸர் (Razor)'. இந்த படம் இன்று (ஜூன் 19ம் தேதி) ஆஹா தளத்தில் வெளியாகவுள்ளது.