உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நிஜத்திலும் காதலியுடன் இணைந்த ஸ்பைடர் மேன்

நிஜத்திலும் காதலியுடன் இணைந்த ஸ்பைடர் மேன்


'ஸ்பைடர்மேன்: ஹோம் கம்மிங்க், ஸ்பைடர்மேன்: பார் பிரம் ஹோம்க், ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்க், ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டேக்' ஆகிய படங்களில் நடித்தவர்கள், பிரபல ஹாலிவுட் நடிகையான ஸெண்டயா, நடிகர் டாம் ஹாலண்ட். உலகம் முழுக்க 'மேட் பார் ஈச் அதர்' ஜோடியாக கொண்டாடப்பட்ட இவர்கள் நிஜவாழ்க்கையிலும் ஜோடியாகி இருக்கிறார்கள். இருவரும் காதலித்து வந்தாலும் திருமணம் செய்வார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

இருவரும் திருமணம் செய்து கொண்டுவிட்டதாக பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட் ரோச் கூறியிருந்தார். அவரது இந்த தகவலை இருவருமே மறுக்கவில்லை. இருவரும் திருமணம் செய்து கொண்டது மாதிரியான ஏஐ படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இதுகுறித்து டாம் ஹாலண்டிடம் “உங்கள் திருமணம் குறித்து போலியாக வெளியான ஏஐ புகைப்படங்கள் குறித்து உங்கள் குடும்பத்தினரிடம் விளக்க வேண்டி இருந்ததா ?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் “தேவையில்லை, ஏனெனில் அவர்கள் அனைவரும் அங்கே இருந்தார்கள்” என்று பதிலளித்தார். இதன் மூலம் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !