உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வடசென்னையின் வாழ்வியலை பேசும் ஆல்பாஸ்

வடசென்னையின் வாழ்வியலை பேசும் ஆல்பாஸ்

வட சென்னை என்றாலே இதுவரைக்கும் அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம் பகை கொலை என்றே தமிழ் சினிமாவில் காட்டி வந்திருக்கிறார்கள். முதல்முறையாக இது எதுவுமே இல்லாத வட சென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் படமாக உருவாகி இருக்கிறது ஆல்பாஸ்.

படம் குறித்து இயக்குனர் மைதீன் கூறுகையில், இது பேமிலி சென்டிமெண்ட் கலந்த கதை கொண்டது. வட சென்னையை மையமாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டிருப்பதால் 45 நாட்கள் முழு படப்பிடிப்பையும் வடசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலேயே படமாக்கி இருக்கிறோம்.

'நிறங்கள் மூன்று', 'தருணம்', போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி 'லியோ' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

‛பாண்டியநாடு', 'எதிர்நீச்சல்' போன்ற படங்களின் மூலம் பிரபலமான சரத் லோகித்ஷவா இந்தப் படத்தின் வில்லனாக நடிக்க, 'பாபநாசம்' படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர், 'பைசன்' படத்தில் பி.டி.வாத்தியாராக நடித்த அருவி மதன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார் . மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.'' என்கிறார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !