34 வருடங்களுக்கு பிறகு இணையும் கூட்டணி
ADDED : 1 days ago
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 65க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் பி. வாசு. தமிழில் சின்னத்தம்பி, மன்னன், சந்திரமுகி, வால்டர் வெற்றிவேல், பொன்மனச் செல்வன் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சிவலிங்கா, சந்திரமுகி 2 ஆகிய படங்கள் வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார் பி.வாசு. இதை ஸ்ரீ மிஸ்ரி புரொடக்ஷன் சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரிக்கின்றார். கடந்த 1992ம் ஆண்டில் பி. வாசு இயக்கத்தில் வெளிவந்த 'ரிக் ஷா மாமா' படத்தை சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரித்திருந்தார். இப்போது 34 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பி.வாசு, சந்திர பிரகாஷ் ஜெயின் கூட்டணி இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.