உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'எல்லம்மா' தெய்வ வழிபாடு : தேவிஸ்ரீபிரசாத் நெகிழ்ச்சி

'எல்லம்மா' தெய்வ வழிபாடு : தேவிஸ்ரீபிரசாத் நெகிழ்ச்சி


தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவிஸ்ரீபிரசாத். தெலுங்கில் பணியாற்றி வந்தாலும் அவர் சிறு வயது முதலே சென்னையில்தான் வசித்து வருகிறார். அவரது தெலுங்குப் படங்களின் வேலைகள் கூட இங்குதான் அதிகமாக நடக்கும்.

எண்ணற்ற படங்களுக்கு இசையமைத்துள்ள தேவிஸ்ரீபிரசாத், 'எல்லம்மா' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடந்து வருகின்றன.

இதனிடையே, தனது சொந்த ஊருக்குச் சென்று அங்கு 'எல்லம்மா' தெய்வ வழிபாடு செய்தது குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில் “ஆந்திர மாநிலத்தில் உள்ள வெடுருபகா என்ற கிராமம்தான் எனது அப்பா பிறந்த ஊர். சிறு வயதில் சென்னையிலிருந்து இங்கு என்னை எனது அப்பா அழைத்து வருவார். இயற்கை, கிராமத்து வாழ்க்கை இங்குதான் அனுபவித்தேன். அந்த ஊருடன், மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக அங்கு ஒரு வீட்டையும் கட்டினோம்.

எனது திரையுலகப் பயணத்திற்கு இந்த கிராமம், கிராமியக் கலைகள், தெய்வீக வழிபாடு ஆகியவையும் ஒரு முக்கியமான காரணம். அவற்றை இந்த கிராமம்தான் கற்றுக் கொடுத்தது. 'எல்லம்மா' படத்திற்கான உத்வேகம் இங்கிருந்துதான் உருவானது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !