'மாளிகைப்புரம்' இயக்குனரின் அடுத்த படைப்பு: வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்
மலையாளத்தில் உன்னிமுகுந்தன் நடிப்பில், விஷ்ணு சசிசங்கர் இயக்கத்தில் சபரிமலை ஐயப்பன் மகிமை சொல்லும் படமாக வந்து வெற்றி பெற்றது 'மாளிகைப்புரம்'. இப்போது அதே இயக்குனர் விஷ்ணுசசிசங்கர் “தத் த்வம் அஸி” என்ற அடுத்த ஆன்மிகபடத்தை இயக்குகிறார். தந்த்ரா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கடந்த 3 மாதங்களாக படத்தின் முன்னேற்பாடு பணிகள் நடந்த நிலையில், இன்று 'தத் த்வம் அஸி' படப் பூஜை தொடங்கியது. இயக்குனர் வெங்கட் பிரபு கிளாப் அடிக்க, இயக்குனர் பொன்ராம் கேமராவை ஆன் செய்து படக்குழுவை வாழ்த்தினார். இதில் வைபவ் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
பக்தி, நம்பிக்கை மற்றும் ஆன்மிக உணர்வுகளை மையமாகக் கொண்டு, அதனுடன் ஆக்சன் மற்றும் உணர்ச்சி கலந்த பொழுதுபோக்கு அம்சங்களையும் சேர்த்துகதை உருவாகி உள்ளது. நடிகர் பிரேம் ஜி அமரன் அமைக்கிறார். இந்த ஆண்டு ஐயப்ப மண்டல காலத்தை முன்னிட்டு “தத் த்வம் அஸி” திரைப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.