உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ‛இரட்டையர்'

சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ‛இரட்டையர்'


அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கத்தில், முற்றிலும் மாறுபட்ட களத்தில் சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ளபடம் “இரட்டையர்”. ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது. படம் குறித்து இயக்குனர் கூறுகையில், ‛‛தமிழ் சினிமாவில் இதுவரை வந்த திரில்லர் படங்களிலிருந்து மாறுபட்டு, அம்மாவுக்கும் இரட்டை பெண் குழந்தைகளுக்குமான அன்பும் உறவும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு விபத்தில் தந்தை உயிரிழக்கிறார். அதில் தாயின் முகமும் கடுமையாக சேதமடைகிறது. பிளாஸ்டிக் சர்ஜரிக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பும் தாயின் விநோதமான நடத்தைகள், அவரது இரட்டை பெண் குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்க தொடங்குகிறது. இதன் பின்னர் அவர்கள் அந்த மர்மங்களை ஆராய ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் திகில் சம்பவங்களே இப்படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது.

இப்படத்தில் அம்மாவாக அபிநயா நடித்திருக்கிறார். இரட்டை குழந்தைகளாக அனுமிதா மற்றும் அனுஷிதா நடித்துள்ளனர். மேலும் சுப்ரமணிய சிவா, சங்கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திட்டக்குடி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு வெறும் 21 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !