உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இயக்குனர், நடிகருக்கு அடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்

இயக்குனர், நடிகருக்கு அடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்


ரவி மோகன் நடிப்பில் ‛கோமாளி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். அடுத்து ‛லவ் டுடே' எனும் படத்தை தானே இயக்கி நடித்தார். அப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து ஹிட்டானது. பின்னர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‛டிராகன்', கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‛டியூட்' படங்களில் அடுத்தடுத்து நடித்தார். இதுவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தான் நடித்த முதல் 3 படங்களும் 100 கோடி வசூலை தாண்டியதால் பிரதீப்பின் மார்க்கெட் உயர்ந்தது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நடித்த ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் ஓரளவே வரவேற்பை பெற்றது. சுமார் 70 கோடி அளவிலேயே வசூலை பெற்றது.

அடுத்ததாக, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குவதுடன் அதில் நாயகனாகவும் பிரதீப் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இதற்கான தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ள அவர், அதில் தன்னுடன் டியூட் படத்தில் நடித்த மமிதா பைஜூவை நாயகியாக நடிக்க வைத்துள்ளார். சென்னையில் சத்தமில்லாமல் படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !