உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛கருப்பு ஸ்டார்' பட்டம் கொடுத்த ரசிகருக்கு திரிஷாவின் பதில்

‛கருப்பு ஸ்டார்' பட்டம் கொடுத்த ரசிகருக்கு திரிஷாவின் பதில்


கடந்த இரண்டு மாதங்களாக சர்ச்சையான விஷயங்களில் மட்டுமே பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த திரிஷாவுக்கு, சமீபத்தில் வெளியான ‛கருப்பு' திரைப்படத்தின் வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர், திரிஷாவுடன் விஜய் இணைந்து நடித்த ‛கில்லி', சூர்யா நடித்த ‛ஆறு' மற்றும் அஜித் நடித்த ‛மங்காத்தா' ஆகிய படங்கள் இந்த மூன்று ஹீரோக்களுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படங்கள் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல, இந்த மூன்று படங்களிலுமே திரிஷா கருப்பு உடை அணிந்து பாடல் காட்சிகளில் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அந்த ரசிகர், இதனாலேயே இந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன, அந்த வகையில் திரிஷாவைக் ‛கருப்பு ஸ்டார்' என்று குறிப்பிடலாம் எனக் கூறியுள்ளார். அவரது இந்தப் பதிவைப் பார்த்த திரிஷா மகிழ்ந்து போய், இது மிகவும் அழகாக இருக்கிறது, நன்றிகள் என்று கூறி சில புன்னகை எமோஜிகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !