உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெளியான உடன் ஹிட்டான 'பெத்தி' படத்தின் அதிரடி கிளாமர் பாடல்

வெளியான உடன் ஹிட்டான 'பெத்தி' படத்தின் அதிரடி கிளாமர் பாடல்


புச்சிபாபு சனா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், ராம் சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடித்துள்ள 'பெத்தி' படத்தின் அடுத்த யு டியூப் வெளியீடாக 'ஹெல்லல்லோ' பாடல் நேற்று வெளியானது. ஐந்து மொழிகளில் வெளியான இந்தப் பாடல் தற்போது 50 மில்லியன் பார்வைகளைக் கடந்து உடனடி ஹிட்டாகி உள்ளது.

தெலுங்கில் 26 மில்லியன் பார்வைகள், ஹிந்தியில் 11 மில்லியன், தமிழில் 7 மில்லியன், கன்னடத்தில் 4 மில்லியன், மலையாளத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

இப்பாடலில் ஸ்ருதிஹாசன் சிறப்புத் தோற்றத்தில் கிளாமர் நடனமாடி உள்ளார். பாடலில் ஜான்வி கபூரும் நடனமாடியுள்ளதால் இன்னும் கூடுதல் ஈர்ப்பை இந்தப் பாடல் தந்துள்ளது.

இப்படத்தின் முதல் சிங்கிளாக வெளியான 'சிக்கிரி சிக்கிரி' பாடல் தெலுங்கில் மட்டுமே 200 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஜுன் 4ல் வெளியாக உள்ள இப்படத்தின் வெற்றிக்கு ஏஆர் ரஹ்மானின் இசையும், பாடல்களும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !