இளம் இயக்குனர் உடன் இணையும் சிவகார்த்திகேயன்
ADDED : 5 days ago
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ‛சேயோன்' படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் மதுரையில் இதன் படப்பிடிப்பு துவங்கியது. ‛நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பி.டி. சார்' ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் வேணுகோபால். இவர் இயக்கிய இரண்டு படங்களும் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றுள்ளது.
இந்த நிலையில் கார்த்திக் வேணுகோபால் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு புதிய கதையைக் கூறியுள்ளார். இந்த கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்துள்ளதால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என தகவல் கிடைத்துள்ளது. மேலும், கார்த்திக் வேணுகோபாலின் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை சிவகார்த்திகேயன் தனது எஸ்.கே புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் முதல் படமாக தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.