ரசிகர்கள் அன்பால் இறந்தும் உயிர் வாழ்கிறேன்: திரிஷ்யம் நடிகர் நெகிழ்ச்சி
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‛திரிஷ்யம்' மற்றும் ‛திரிஷ்யம் 2' ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து இதன் மூன்றாம் பாகமான ‛திரிஷ்யம் 3' இன்று வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும், கதை ஓட்டத்திற்கு காரணமாகவும் மூன்றாம் பாகம் வரை கதையை நகர்த்தி செல்லவும் உதவியாக இருந்தது. அந்த படத்தில் பெண் போலீஸ் அதிகாரியின் மகனாக நடித்திருந்த வருண் பிரபாகர் கதாபாத்திரம் தான்.. இந்த கதாபாத்திரத்தில் இளம் நடிகர் ரோஷன் பஷீர் நடித்திருந்தார்.
முதல் பாகத்திலேயே இவரது கதாபாத்திரம் கொல்லப்பட்டாலும் கூட, இரண்டாம் பாகத்திலும் கடைசிவரை பல இடங்களில் இவரது கதாபாத்திர பெயர் உச்சரிக்கப்பட்டு கொண்டே இருந்தது. தற்போது மூன்றாம் பாகத்திலும் இவரை, அதாவது இவரது மரணத்தை மையமாக வைத்து தான் கதை நகர்கிறது.
தற்போது திரிஷ்யம் 3 வெளியாகி உள்ள நிலையில் ரோஷன் பஷீர் இது குறித்து கூறும்போது, முதல் பாகத்திலேயே எனது கதாபாத்திரம் முடிவடைந்து விட்டாலும் கூட, இந்த மூன்றாம் பாகம் வரை ரசிகர்கள் காட்டிய அன்பு, மீம்ஸ் மற்றும் துணுக்குகள் மூலமாக அந்த வருண் பிரபாகர் கதாபாத்திரம் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.