பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர்
ஹிந்தி படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா என்ற படத்தின் மூலம் தெலுங்குக்கு வந்தார். அந்த படம் கமர்சியல் ரீதியாக வெற்றி பெற்றதை அடுத்து தற்போது ராம் சரண் நடித்துள்ள பெத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படம் ஜூன் நான்காம் தேதி திரைக்கு வரும் நிலையில் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
தேவரா படத்தைப் போலவே இந்த படத்திலும் கிளாமர் ஹீரோயினாக நடித்திருக்கிறார் ஜானகி கபூர். அவர் நடித்துள்ள காட்சிகள் பெரும்பாலும் கவர்ச்சியை முன்னிறுத்தி அமைந்துள்ளது. இப்படி தொடர்ந்து கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் ஜான்வி கபூர் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்து விடுவார். சில படங்களோடு காணாமல் போய் விடுவார் என்று சோசியல் மீடியாவில் விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.
ஜான்வி கபூரை பொறுத்தவரை ஹிந்தியில் பல படங்களில் நடித்திருந்தாலும் கமர்சியல் ரீதியாக அவருக்கு பெரிய இடம் கிடைக்கவில்லை. தெலுங்கில் வெளியான தேவரா படம் தான் வணிக ரீதியாக அவருக்கு வெற்றியை கொடுத்தது. தற்போது பெத்தி படம் ஜூன் 4-ல் திரைக்கு வரப்போகிறது. தவிர அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ராக்கா படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.