ரூ.1000 கோடி வசூலில் 'ராமாயணா', அதிகாரப்பூர்வ அறிவிப்பு
1000 கோடி வரட்டும், அறிவிக்கலாம் என 'ராமாயணா' படக்குழு காத்திருந்தது போல. சற்று முன்னர் படத்தின் வசூல் உலக அளவில் 1000 கோடியைப் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் நவம்பர் 5ம் தேதி இப்படம் வெளியானது. படம் வெளியான பின் ஏழு நாட்களிலும் தொடர்ந்து 100 கோடி வசூலைப் பெற்றது.
இந்திய சினிமாவில் இதுவரையில் “பாகுபலி 2, கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர், பதான், ஜவான், கல்கி 2898 ஏடி, புஷ்பா 2, துரந்தர் 1, துரந்தர் 2,” ஆகிய படங்கள் 1000 கோடி வசூலைக் கடந்துள்ளது. அந்த வரிசையில் 10வது படமாக 'ராமாயணா' படம் இணைந்துள்ளது.
இந்தப் படத்தின் வசூல் குறித்து இதுவரையில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வந்த நிலையில், ராமர், சீதா, ராவணன் ஆகியோரது கதாபாத்திர போஸ்டர்களுடன் 1000 கோடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.