உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பஹத் பாசில் - பிரேம்குமார் இணையும் புதிய படம் துவக்கம்

பஹத் பாசில் - பிரேம்குமார் இணையும் புதிய படம் துவக்கம்


கடந்த 2018ல் விஜய் சேதுபதி, திரிஷா நடித்த '96' என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம்குமார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், தமிழில் அடுத்ததாக கார்த்தி, அரவிந்த் சுவாமி நடிப்பில் 2024ல் 'மெய்யழகன்' படத்தை இயக்கினார். இதுவும் வரவேற்பை பெற்றது.

அடுத்து, நடிகர் விக்ரமை வைத்து ஒரு திரைப்படம், '96' இரண்டாம் பாகம் ஆகியவற்றை இயக்குவார் என்ற தகவல் வெளிவந்தது. இதில் விக்ரமுடனான படம் கைவிடப்பட்டது, 96 இரண்டாம் பாகம் தள்ளிப்போனது. இதற்கிடையே வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் புதிய படம் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மலையாள நடிகர் பஹத் பாசில் நாயகனாக நடிக்க, நடிகை ஷிவதா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இயக்குநர் பிரேம்குமாரின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !